துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார்.

இந்த சிறுவனின் பெயர் யூனிஸ். அதன்பிறகு யூனிஸ் கைகடிகாரத்தை எடுத்து அதை துபாய் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அந்த சுற்றுலா பயணிக்கு தொடர்பு கொண்டு கைகடிகாரத்தை ஒப்படைத்துள்ளனர். மேலும் நேர்மையாக கைகடிகாரத்தை கொடுத்த காரணத்திற்காக துபாய் காவல் துறையினர் சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்ததோடு இதை தொடர்பான புகைப்படத்தை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.