
சமீப காலமாக தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஆங்காங்கே நிலவி வருவதாக கேட்டிருப்போம் .அந்த வகையில் மழை தொடங்கிய உடன் தென் மாவட்ட பகுதிகளில் பலருக்கும் ஞாபகம் வருவது குற்றாலம் தான். மழை பெய்த சில நாட்களிலேயே அருவிகளில் நீர்வரத்து வர தொடங்கிவிடும். சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக சென்று குளித்து மகிழ்வார்கள்.
அந்த வகையில் இன்று குற்றாலத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதேபோல் உள்ளே சிலர் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
View this post on Instagram