
நாடு முழுவதும் பல்கலை மானிய குழு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் போலி பல்கலை பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் சுமார் 21 பல்கலைகள் போலி பல்கலையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரா 2, டெல்லி 8, மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரியில் ஒரு பல்கலை வீதமும், உத்திரபிரதேசத்தில் நான்கு, மேற்கு வங்கத்தில் இரண்டு மற்றும் கேரளாவில் இரண்டு உட்பட 21 பல்கலைக்கழகங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் தமிழகத்தில் எந்த ஒரு பல்களையும் இடம்பெறவில்லை. பிற மாநிலங்களில் படிப்புக்காக செல்லும் மாணவர்கள் இந்த பட்டியலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் விவரங்களை https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.