
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும் கணக்கிட்டு தலா இரண்டு வழக்கறிஞர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சி சார்பாக சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு செல்லும் பொது மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர்கள் சட்ட உதவிகளை வழங்குவார்கள். வழக்கறிஞர்கள் நியமனத்தை இந்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.