உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாரா என்ற இந்த பாடலுக்கு பா.விஜய் வரிகள் எழுத அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் நாளை மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால் ப்ரொமோஷனுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.