பிரபல பாடகரும் பேஜ்பூரி நடிகருமான பவன் சிங் பாஜகவில் இருந்து அதிரடியாக இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மேற்கு வங்கத்தில் ஹசன்சோல் எம்பி சீட்டை பாஜக முன்னதாகவே அறிவித்திருந்தது. ஆனால் பவன் சிங் அதில் போட்டியிட தயக்கம் காட்டியதாக  கூறப்படுகிறது.

இதனை அடுத்து சில நாட்களிலேயே அவர் எதிர்பாராத விதமாக பீகாரில் உள்ள கரகாட்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதால் பாஜக அந்த சீட்டை ஆர் எல் எம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது.