
இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அனைத்துமே தொழில்நுட்பமயமாகிவிட்டது. whatsapp செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது . வாட்ஸ் அப்பில் இருந்து யாருக்காவது மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும் முதலில் உங்களுடைய whatsapp காண்டாக்ட் அவர்களுடைய whatsapp எண் சேமிக்கப்பட்டு இருப்பது அவசியம். இவ்வாறு நம்பர் சேவ். செய்யாமல் மெசேஜ் செய்ய வழி எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி பலருக்கும் இருக்கும்.
அவ்வாறு செய்ய, முதலில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் உள்ள whatsapp அப்ளிகேஷனை ஓபன் செய்து whatsapp-இல் மெசேஜ் அனுப்ப விரும்பும் செல்போன் நம்பரை காபி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கீழே காணப்படும் நியூ சாட் என்ற பட்டனை அழுத்தி வாட்ஸாப் காண்டாக்ட் கீழ் உள்ள பெயரை டாப் செய்ய வேண்டும்.
பின்னர் டெக்ஸ்ட் பாக்ஸில் காப்பி செய் செல்போன் நம்பரை பேஸ்ட் செய்து SENT என்பதை கிளிக் செய்ய வேண்டும். நம்பரை டேப் செய்த பிறகு, அந்த நம்பர் Whatsapp இல் இருந்தால் உங்களால் Chat with ஆப்ஷனை காணகூடியதாக இருக்கும். அதனை டேப் செய்து அந்த நம்பரை சேமிக்காமலேயே எளிதாக Whatsapp மெசேஜை அனுப்ப முடியும்.