ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். இந்தப் பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி 2000-ஐ எண்ணிக்கை தாண்டி உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.

அதோடு பலர் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதோடு, எங்களால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.