நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 ஆம் கட்ட தேர்தல் மட்டும் நடக்க இருக்கிறது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில் ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்ய இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் பிரசாரம் செய்த அவர், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களின் பட்டியலை தயாரிக்க இருப்பதாகவும், அவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ரூ.8,500 வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம், நாட்டின் அனைத்து ஏழை பெண்களும் பயன்பெற இருப்பதாக தெரிவித்தார்