நடிகர் பஹத் பாசில் நஸ்ரியாவின் கணவர் என்றே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர்  தற்போது தனக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் அங்கு வருகை தந்த மருத்துவர் ஒருவரிடம்  ADHD எனப்படும் குறைபாடு எளிதில் குணப்படுத்த முடியுமா என்று கேட்டார்.

சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என மருத்துவர் பதிலளிக்க 41 வயதுடையவருக்கு எப்படி என்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவருக்குத்தான் அந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வேகம் எடுத்துள்ளது.