கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . ஒரு கட்டத்தில் ரங்கசாமி அந்த பெண்ணோடு தனிமையிலிருந்து வந்துள்ளார். ரகசியமாக இருந்ததை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அந்த ஆபாச வீடியோவை காட்டி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் அந்த பெண் புகாரளித நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சிறையிலிருந்து வெளிவந்த அவர் மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மீண்டும் அந்த பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.