தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ள நிவேதா தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நிவேதா பெத்துராஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது கார் டிக்கியை திறக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது உண்மையாக நடந்த சம்பவமா அல்லது அவர் தற்போது புதிதாக நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான பிரமோஷனா என்பது சரிவர தெரியவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.