சென்னை அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் பகுதியில் சேர்ந்த தங்கபாண்டியன் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் யாஸ்மிகா என்ற இரண்டரை வயது குழந்தையும் உள்ளது. தங்கபாண்டியன் தன்னுடைய குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி தங்கப்பாண்டியன் வழக்கம் போல வேலைக்குச் சென்ற போது வீட்டில் மனைவியும் குழந்தையும் இருந்துள்ளனர். அந்தப் பகுதியில் மாலை 4 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நேரத்தில் யாஸ்மிகா அருகில் உள்ள வீட்டின் முன் பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று குழந்தையை பார்த்ததும் கடிப்பதற்கு மேலே பாய்ந்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்த குழந்தையின் முகத்தில் கண்மூடித்தனமாக கடித்து குதறியது. உடனே குழந்தையின் அழகில் சத்தம் கேட்டு வெளியே வந்த தாய் கட்டையை எடுத்து நாயை அடித்து துரத்தி சிறுமியை மீட்டார். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் கண்ணத்தில் தெரு நாய் கடித்து குதறியதில் சதை கிழிந்து தொங்கியது. இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.