
அமெரிக்காவில் ஹென்றி இயர்ல் (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உலகில் அதிக நாட்களை சிறையில் கழித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதாவது தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 6000 நாட்களை அவர் சிறையில் கழித்துள்ளார். இவர் முதல் முறையாக 18 வயது இருக்கும்போது ஆயுதத்தை மறைத்து சென்ற குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கடந்த 1000-வது முறையாக 2008 ஆம் ஆண்டு ஒருவரின் வீட்டில் பின்னால் சிறுநீர் கழித்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மொத்தம் 1300 முறைக்கும் மேலாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கென்று தனிக் குடும்பம் எதுவும் இல்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று உள்ளூர் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது பற்றி அவர் வாழ்ந்த பகுதியில் உள்ளவர்கள் கூறும் போது சமூக விதிகளை பற்றி கண்டுகொள்ளாமல் சுதந்திரமாக வாழக்கூடிய ஒருவர் என்று கூறியுள்ளனர்.