மத்திய பிரதேச மாநிலத்தில் 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இளம் பெண்ணின் வீட்டிற்கு சலீம் கான் என்ற வாலிபர் தன்னுடைய கூட்டாளிகளான ஷாருக், சமீர், ஜோதா ஆகியோருடன் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளார். இவர்கள் இளம் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை கடத்த முயற்சி செய்துள்ளனர். இதை தடுக்க வந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரனை அவர்கள் கடுமையாக தாக்கியதோடு இளம்பெண்ணை தரதரவன வெளியே இழுத்து வந்தனர். அப்போது அக்கம் பக்கத்தினர் கூடினர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு சலீம் மிரட்டியுள்ளார். இருப்பினும் கூட்டம் அதிகமானதால் சலீம் பயந்து  இளம்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு  சென்றுவிட்டார்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது சலீம் இளம்பெண்ணை ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து அவர் இளம் பெண்ணை மிரட்டியதுடன் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என கூறியுள்ளார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற இருந்ததால் சலீம் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கடத்த முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவருடைய தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சலீம் உட்பட இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.