
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 35-38 இடங்களை பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் 4 முனை போட்டி (திமுக, அதிமுக, பாஜக, நாதக) நடைபெற்றது. அதிமுக கூட்டணி 1, பாஜக கூட்டணி 3 இடங்களையும் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தனித்து களம் கண்ட நாதக ஒரு தொகுதியில் கூட வெல்ல வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது