
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைவார், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றியை பதிவு செய்வார் என ‘இந்தியா டுடே’ நாளிதழ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள அண்ணாமலை, கோவையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக, கோவை தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது