நேற்றோடு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில், பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அதிமுக (0-2) படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுக்க நினைத்த இபிஎஸ்ஸின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உட்கட்சி பூசல், ஆளுமையின்மை போன்றவற்றைக் கூறி மாற்றுத் தலைவரை தேர்வு செய்யக் கோரும் குரல்கள் கட்சிக்குள் எழலாம் என்றும் கூறப்படுகிறது