தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தூத்துக்குடிக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சென்றார். இவர் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தென் மாவட்டங்களில் உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி என்பது இருக்கிறது. இதை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால் படிப்படியாக மாற்றலாம்.

இதை மாற்ற எல்லோரும் ஒன்று சேர்ந்து கலைத்துறை மற்றும் அரசியல் போன்றவைகளின் மூலம் அழுத்தமான வேலைகளை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். தற்போது படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. அனைவருடைய வீட்டிலும் பூஜையறை இருந்தாலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதுபோல அனைவரும் ஒன்று சேர்ந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான். அது ஒருபோதும் மாறாது என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவருடைய விருப்பம். மேலும் அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.