அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் இரு வாலிபர்கள் தங்க நகையை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் சென்ற ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு வாலிபர் ஏறிய நிலையில் மற்றொரு வாலிபர் அவர்கள் பின்னால் பைக்கில் பின்தொடர்ந்து சென்றார். அப்போது ஒரு குறிப்பிட்ட இடம் வரவும் அந்த வாலிபர் தான் இறங்க வேண்டும் என கூறினார். அந்த வாலிபர் இறங்கியவுடன் அந்த பெண்ணின் தங்கக் காதணியை பறித்து விட்டு ஓடினார்.

அப்போது பைக்கில் மற்றொரு வாலிபர் அவரை ஏற்றுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். அவர்கள் பின்னால் திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே அந்த பெண் ஓடினார். அப்போது அங்கு ஒரு பேருந்து வந்த நிலையில் அந்த பெண் கூச்சலிடுவதை ஓட்டுநர் கவனித்தார். உடனடியாக அவர்களை நிறுத்த வேண்டும் என்று பேருந்தை அந்த பைக்கின் மீது அவர் ஏற்றினார். இதில் பைக் கீழே விழுந்த நிலையில் வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.