
இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பப்புவா நியூ கினியா இரு நாடுகளும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானாவில் நடைபெற உள்ளது .
9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின.. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இந்த ஆட்டத்தில் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து விளையாடிய அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் வாய்ந்ததாக உள்ளது. பப்புவா நியூ கினியா அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கக் கூடிய அணியாக திகழும். இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். மேலும் பல வானவேடிக்கைகள் நிகழும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்…