
தற்போது நாடு முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் சொமாட்டோ நிறுவனம், வெப்பம் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில் அவசிய தேவையின்றி உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
வெப்பம் அதிகமுள்ள மதிய வேளையில் டெலிவரி ஊழியர்கள் கடும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும் என்பதாலும், அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டும் இந்த கோரிக்கையை வைப்பதாக சொமாட்டோ அறிவித்துள்ளது.