விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 94392 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 87,390 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 34,463 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கௌஷிக் 18, 885 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும் விருதுநகரில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.