ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதனால் ஜூன் 9-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் தோல்வியை தொடர்ந்து மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். மேலும் அதன்படி இன்று மாலை 4 மணிக்கு அவர் ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.