
மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற உள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அல்லது மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுகளில் 8% வாக்குகளை பெற வேண்டும். அந்த வகையில் இரண்டு தொகுதிகளில் வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க உள்ளது.