புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடினார். இந்த நிலையில் இந்த பாடல் என்னிடம் வந்த போது குடும்பத்தார் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே இதில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள் என்று சமந்தா கூறி இருக்கிறார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், ஏனென்றால் அது நான் விவகாரத்தை அறிவிக்க சமயம். நான் ஏன் அதை மறக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் 100% கொடுத்தேன். ஆனால் அது பயன் கொடுக்கவில்லை. விவகாரத்தையும் பாடலில் நடிப்பதையும் நான் ஏன் சம்பந்தபடுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.