மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேர்தல் நெருக்கத்தில் பாஜக கூட்டணிக்கு மாறியது. ஒரு வேளை அதிமுக கூட்டணியில் தொடர்ந்திருந்தால், சௌமியா வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பிருந்ததாக கள ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவிய விஜய பிரபாகரன் வென்றிருக்கவும் வாய்ப்பிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஜக கூட்டணியை பாமக தொண்டர்கள் விரும்பவில்லையா? என்ற கேள்வி எழுகிறது