
மக்களவைத் தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைய வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைக்கூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை காக்க வேண்டிய கடமை அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களுக்கு இருக்கிறது. தோல்வியில் இருந்து இயக்கத்தை மீட்க ஒன்றிணைவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் திட்டமிட்டுள்ள நிலையில் இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.