
இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வீழ்த்தப்படவில்லை தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜய பிரபாகரன் தோல்வியடைந்தார். திட்டமிட்ட சூழ்ச்சியால் தான் விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்று கூறினார். விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் 3,77,721 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.