
NDA கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை தேர்வு செய்ய வேண்டும் என அமித்ஷா முன்மொழிந்தார். இதனை ராஜ்நாத் சிங் மற்றும் ஜேபி.நட்டா வழி மொழிந்தனர். இதனைத் தொடர்ந்து 293 எம்பி.க்களும் ஒரு மனதாக மோடியை மீண்டும் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.