
மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது. எலுமிச்சைபழத்தை தலையில் தேய்ச்சா சரியாகிடும் என பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். முன்னதாக மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைந்ததை அக்கட்சியின் மூத்த தலைவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போது தோல்வியை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே நடக்கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.