
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் கழுத்தில் குடல் சுற்றி இருப்பதாக கூறி அம்மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு ஆர்த்திக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இரவு முழுவதும் வலியால் துடித்த பெண்ணுக்கு காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதனால் வேதனை அடைந்த பெண்ணின் உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.