இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்பி மக்கள் தினம்தோறும் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு பாஜக சார்பில் மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அந்தச் செய்தியுடன் வரும் லிங்கை கிளிக் செய்தால் மொபைல் எண்ணை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது பொய்யான தகவல் என தெளிவுப்படுத்தி உள்ள போலீசார் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.