திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லதா (40) என்பவருடைய மகள் சௌமியாவிற்கும் விவேக் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குள் நடந்த பிரச்சனையால் சௌமியா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பை ஏற்பட்ட நிலையில் இதனை அறிந்த லதா அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

அதன் பிறகு விவேக் இது குறித்து அறிந்த நிலையில் நியாயம் கேட்க வந்துள்ளார். ஆனால் சௌமியா கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றச் சென்றதை அறிந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் லதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விவேக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.