தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 10ஆம் தேதி அதாவது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ள நிலையில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு 220 நாட்கள் பள்ளிகள் செயல்பட உள்ளன. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு, ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேலையும் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.