கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொடைக்கானலில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது.

இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூங்கா ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை போன்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் கடை வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.