
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் நேற்று அழைத்து வந்துள்ளனர். அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விடுவிக்க கோரியும் ரவுடிகளின் ஆதரவாளர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். தற்போது போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.