தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய தந்தை பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தாயார் சோபா பல படங்களில் பாடியுள்ளார். இந்நிலையில் ஷோபா சமீப காலமாக கொடுக்கும் பேட்டிகள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் பற்றி அவர் பேசிய விஷயம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்போது நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் சேர்த்து சோபா உணவு கொடுப்பார். நடிகர் விஜய்க்கு மட்டும் கொடுக்காமல் எனக்கும் சேர்த்து சோபா அம்மா உணவு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவங்க கையால் சாப்பிட்டதை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன் என நடிகர் அஜித் ஒரு மேடையில் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை கூறிய சோபா நடிகர் அஜித் என்னை பற்றி அப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார்.