
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்ஷி சின்கா. இவர் ரஜினி நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த தபாங் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் சோனாக்ஷி சின்ஹா நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இருவருக்கும் வருகின்ற 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
