
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுகவை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர். அவருக்கு அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்பது நன்றாகவே தெரியும். நாங்கள் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் திமுகவை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.
திமுக பற்றிய முதலமைச்சர் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தால் அதிமுக பற்றி பேச இந்த ரகுபதிக்கு தகுதி இருக்கிறது. இனி அதிமுகவில் என்னென்ன கூத்துகள் நடக்கப்போகிறது மற்றும் என்னென்ன புரட்சிகள் வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்கு வங்கி என்பது பாமக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை சேர்த்து கிடைத்தது தான். மேலும் பாஜக தேர்தலில் அவர்கள் தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை என்று கூறியுள்ளார்.