
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட்(NEET) எனப்படும் நுழைத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து சுமார் 1.5 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார்கள்.
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதினார்கள். அந்த வகையில்தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் இந்த நிலை தேர்வு நடைபெற்றது.
இந்த சூழ்நிலையை நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து நீட் தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது . மேலும் நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக இதனை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.