தமிழகத்தில் புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

இதன் மூலம் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். அதன் பிறகு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் தடை இன்றி பெறலாம்.