PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பின் அவர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 4.21 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ள நிலையில் மேலும் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதியில் 3 கோடி வீடுகள் கட்டித் தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.