கரூர் மாவட்டம் கருங்கலாபள்ளி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் (16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கோமாளி பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 9-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான நேற்று சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மேலும் இது தொடர்பாக குளித்தலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.