
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியானது தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 35 லட்சம் வாக்குகளோடு 8.19 சதவீதம் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது நாதாக கட்சி.
மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நாதக கட்சி தனித்து களம் காண்கிறது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்க இருப்பதாக சீமான் திட்டமிட்டுள்ளார்.