
இந்தியாவைப் பொறுத்த வரையில் வாகனம் ஓட்டுவதற்கு அனைவருக்கும் லைசென்ஸ் என்பது அவசியம். முறையான போக்குவரத்து விதிகளை அறிந்து அனைவரும் லைசென்ஸ் பெற வேண்டும். பழகுனர் உரிமத்தை பெற்ற பிறகு ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலமாக ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுனர் உரிம தேர்வுக்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதனைப் போலவே மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவு காண விண்ணப்பம் நகல், பதிவு சான்றிதலுக்கான விண்ணப்பம், ஆர்சிக்கு என்ஓசி வழங்குதல், ஆர்சியில் அட்ரஸ் மாற்றம், புதிய அனுமதி வழங்கல், நகல் அனுமதி மற்றும் பரிமாற்றம் ஆகியவை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.