
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் காந்தாரா படத்தை இயக்கி நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக ஜொலிக்கிறார். இவர் எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் இந்த அளவுக்கு திரையுலகில் உயர்ந்துள்ளார். இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு மங்களூரில் பிறந்தார். இவருக்கு சிறு வயது முதலே திரைப்படத்துறையில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

இருப்பினும் படம் பார்ப்பதற்காக அடிக்கடி தந்தையிடம் பணம் கேட்க முடியாது என்பதற்காக தண்ணீர் கேன் போடுவது மற்றும் ஹோட்டலில் வேலை செய்வது என அனைத்து விதமான வேலைகளையும் செய்துள்ளார். ஆனால் நடிகராவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாத நிலையில் , முதலில் 6 முதல் 7 வருடங்கள் வரை உதவிய இயக்குனராக பணிபுரிந்தார். இதைத்தொடர்ந்து துக்ளக் என்ற படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு கன்னட சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள ரிசப் ஷெட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தார படத்தை இயக்கி நடித்தார். இதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். மேலும் தற்போது காந்தாரா 2 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாக.