
அமெரிக்க நாட்டின் அதிபராக ஜோ பைடன் இருக்கிறார். இவருடைய மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கம் அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஹண்டர் பைடன் தான் குற்றவாளி என கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தற்போது அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் குறைந்தபட்சம் 25 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்நாட்டு அரசியல் அமைப்பு சாசனத்தின் படி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு 120 நாட்களுக்குள் தண்டனை விபரம் அறிவிக்கப்படும். அந்த வகையில் அதிபர் தேர்தலுக்கு முன்பாக ஹண்டர் பைடனுக்கு தண்டனை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக கூறினார். அதே நேரத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.