
பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி நிலவிவரும் நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி செய்தி ஸ்ரீனிவாசன் தற்போது போட்டுள்ள போஸ்ட் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜக தலைவர் மாற்றம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளைஞர் ஒருவர் பாஜக தலைவராக வரப்போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது. ஜே.பி.நட்டா மத்திய அமைச்சராக தேர்வாகியுள்ளார். இதன் காரணமாக அடுத்த பாஜக தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு வானதி சீனிவாசன், 1951 முதல் தற்போது வரை, பாஜகவின் தலைவர் யார் என்பதும், அவர் தேர்ந்தெடுக்கப்படும் முறையும் யாருக்கும் தெரியாது. பாஜக தேசியத் தலைவராக இருந்தவர்களின் வாரிசுகள் யாரும் தலைவர் பதவிக்கு வந்ததில்லை. அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது எனத் பதிலளித்துள்ளார்.