ஒடிசாவில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்துள்ளது.

ஒடிசாவில் இந்த வாரத்தில் வெப்பத்தின் அளவு  4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 41 பேரின் இறப்பிற்கு கோடை வெப்பமே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.